Search
Wednesday 8 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணி முகாமையாளர் பதவியை இராஜினாமா செய்யவில்லை- அசங்க குருசிங்க

இலங்கை அணி முகாமையாளர் பதவியை இராஜினாமா செய்யவில்லை- அசங்க குருசிங்க

இலங்கை அணியின் முகாமையாளர் பதவியை அசங்க குருசிங்க இராஜினாமா செய்துள்ளாhர் என வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார்
இது தொடர்பாக அசங்ககுருசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் தனது இராஜினாமா குறித்த செய்திகளை நிராகரித்துள்ளார்
நான் இராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவல்களை தொடர்ந்து பலர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டனர்,நான் இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்பதையும் முகாமையாளராகவோ தெரிவுக்குழுவிலிருந்தோ இராஜினாமா செய்வது குறித்தோ எவருடனும் பேச்சுக்களை மேற்கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வதந்திகள் ஆதாரமற்றவை இவற்றினால் எங்கள் அணி தேவையற்ற குழப்பத்திற்கும்நிச்சயமற்ற நிலைக்கும் தள்ளப்படலாம் இதன் காரணமாக அவர்களது மனோநிலை தோல்வியடையலாம் என தெரிவித்துள்ள அசங்க குருசிங்க ஊடகவியலாளர்களை இவ்வாறான செய்திகளை வெளியிடவேண்டாம் என கோருவதாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *