Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை -இந்திய வானிலை நிலையம் தகவல்

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை -இந்திய வானிலை நிலையம் தகவல்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வழிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் முதல் ஆந்திர கடலோர பகுதிவரை நீடித்து வருகிறது.இது குறித்த வானிலை மைய அதிகாரி தெரிவிக்கையில் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்போது தமிழகத்தில் மேலும் அதிகமான மழை பெய்யும்.தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திரா வரை பரவி உள்ளதால் விட்டு விட்டு மழை பெய்கிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *