Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை இராணுவத்திற்கு பால்விநியோகம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – தமிழக முதலமைச்சர்

இலங்கை இராணுவத்திற்கு பால்விநியோகம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – தமிழக முதலமைச்சர்

இலட்சக்கணக்கில் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை இராணுவத்திற்கு பால்விநியோகம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என தெரிவித்து இலங்கை இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை நிராகரித்துவிட்டதாக தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.அத்துடன் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்று தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிற்கு ஆவின்பாலை விநியோகிப்பதற்கான யோசனை குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், சிங்களவர்கள் உட்பட சாதாரண மக்களிற்கு தாங்கள் ஆவின்பால் விநியோகத்தினை மேற்கொள்ளத் தயாராகவிருப்பதாக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தனியார் அமைப்பொன்று இலங்கை இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது.இலட்சக்கணக்கில் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை இராணுவத்திற்கு பால்விநியோகம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை நிராகரித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *