Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் ஊடுருவல் 2 மாதங்களுக்குள் தடுக்கப்படும் : டக்ளஸ்

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் ஊடுருவல் 2 மாதங்களுக்குள் தடுக்கப்படும் : டக்ளஸ்

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி வரும் செயற்பாடுகள்  2 மாதங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வடக்கு கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வன்னி மாவட்ட எம்.பியான சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் பற்றி இந்திய தரப்புடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை அமைச்சரவையிலும் கலந்துரையாடவுள்ளது. இதன்படி அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *