Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக் கான பொதுமக்கள் கொல்லப்பட் டனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் தென்னிந்திய மாநிலங் களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகக் கடற்கரையை ஒட்டிய கிராமப்புறப் பகுதிகளிலும் போலீஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.ராமேஸ்வரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் மற்றும் சென்னை கடல்களில் கடலோர பாதுகாப்புப் படையினர்தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட் டுள்ளனர். சந்தேகத்துக்குரிய மீன்பிடிப் படகுகளில்சோதனையும் நடத்தப்படு கிறது. தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் நேற்றுமுதல் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுப் பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையங்களின் பாதுகாப்பை கவனித்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு சந்தேக நபர்களை விசாரிக்கவும், சோதனை செய்யவும் உத்தர விடப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களுக்கு வெளியே முதல் கட்ட பாதுகாப்புப் பணியை தமிழக போலீஸார் செய்து வருகின்றனர். இதில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், வாகன நிறுத் தங்களிலும் மோப்ப நாய்கள் மூலம் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் இருந்து தமிழகம் வரும் விமானங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும், அதிலிருந்து வரும்பயணிகளை தீவிரமாக சோத னைக்கு உட்படுத்தவும் அவர்கள்மீது விசாரணை நடத்தவும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. கடற்கரையோரங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரையோர காவல் நிலைய போலீஸாருக்கு, தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி வன்னியபெருமாள் உத்தரவிட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *