இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணித் தலைவரான திமுத் கருணாரட்ன பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மது போதையில் வாகனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை கிங்ஸி ஹோர்டன் பகுதியில் இவர் செலுத்திய கார் முச்சக்கர வண்டியொன்றுடன் இன்று அதிகாலை 5.15 மணியளவில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர் மதுபோதையைில் இருந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
UPDATE :இன்று காலை கைதாகிய திமுத் கருணாரட்ன பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். -(3)