இந்த மாத இறுதியில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு யோசனையை முன்வைப்பதற்கு பிரிட்டன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையில் அடங்கியுள்ள விடயங்களை செயற்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாகவே இம்முறை யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)

Previous Postதயாசிறி வைத்தியசாலையில் அனுமதி
Next Postஉயர்தர மாணவர்களுக்கு விரைவில் டெப் கணனி : அமைச்சரவை அனுமதி