Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை

இலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினால் உண்டாகும் வன்முறை சம்பவங்களை கருத்திற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கை மீதான புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தியாவசிய பயணங்கள் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலமே ஐக்கிய அரபு இராச்சியம் தனது நாட்டு மக்களுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *