Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளது-இராணுவத் தளபதி

இலங்கை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளது-இராணுவத் தளபதி

விடுதலை புலிகளுடனான யுத்தம் நிறைவுக்குவந்து 10 ஆண்டுகள் ஆகின்றபோதும் நாடு அதன் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தவில்லை. இவ்வாறு இலங்கை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளது அந்த துறையில் நாடு மேலும் முன்னேற வேண்டும்.இதேவேளை போருக்குப் பிறகும் வெடிபொருட்களை மீட்க்கப்பட்டன, கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அந்த நடவடிக்கைகளின் போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை.

விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த தொழில்நுட்பமே தற்போதும் விமான நிலையத்தில் இருப்பதாகவும் தொழில்நுட்ப ரீதியாக இலங்கை முன்னேற வேண்டும்.ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இன்று புதன்கிழமை முன்னிலையாகி அங்கு சாட்சியம் வழங்கும்போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் காணப்படும் தொழில்நுட்பம் குறித்து நான் கவலையடைகின்றேன்.ஆவணங்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளை விடுத்து மாறாக கணினி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நாட்டிற்குள் நுழைபவர்கள் தொடர்பாக எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு அமைப்பு இருக்க வேண்டும். அதன் பிரகாரம் விமான நிலையத்தில் பயோமெட்ரிக்ஸ் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *