Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று ஆரம்பம்

இலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கராச்சியில் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த இரு நாடுகளுக்கிடையிலான போட்டி ஒன்று பாகிஸ்தானில் 10 வருடங்களுக்குப் பின்னர் தற்பொழுது நடைபெறுகின்றது.
பாகிஸ்தானில் இலங்கை அணியினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் தாம் திருப்தி கொண்டிருப்பதாகவும் இலங்கை அணியின் முகாமையாளர் அசந்த டிமெல் தெரிவித்துள்ளார். அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அல்லது அதற்கு சமமான பாதுப்பு இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு வழங்கப்பிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மூன்றும், ரி-20 போட்டிகள் மூன்றும் நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டித் தொடரில் நடுவர்களாக மைக்கல்கவப் மற்றும் யோவில்சன் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *