Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்க வீதத்தை மேலும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது

இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்க வீதத்தை மேலும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2020 யூன் 16 ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் 2.00 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.நேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை மூலம் உள்நாட்டு நாணயச் சந்தைக்கு மேலதிகமாக 115 பில்லியன் ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மோசமான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் எதிர்காலத்தில் பொருளாதாரம் மற்றும் நிதியியல் உறுதிப்பாடு மீது தீவிர அழுத்தம் உருவாகக்கூடும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.நாணயச் சபையானது பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் கண்காணிக்கும் என்பதுடன் எதிர்வரவிருக்கும் காலத்தில் பொருளாதார நடவடிக்கையின் நிலைத்திருக்கக்கூடிய மறுமலர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு மேலதிக கொள்கை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை எடுக்கும்.இதனால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளின் நிதிச்செலவை குறைத்து பொருளாதாரத்திற்கான புழக்கத்தை அதிகரிக்க முடியும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நிதித் துறையானது தொழில்களுக்கும் வீட்டலகுகளுக்கும் குறைந்த செலவில் கடன் வழங்குதலை அதிகரிப்பதன் மூலம் உயர்வான திரவத்தன்மை மட்டத்தினதும் குறைக்கப்பட்ட நிதியியல் செலவுகளினதும் நன்மைகளைத் தாமதமின்றி பொருளாதாரத்திற்கு பரிமாற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது.நியதி ஒதுக்கு விகிதத்தின் குறைப்பானது உள்நாட்டு பணச் சந்தைக்கு ஏறத்தாழ ரூபா 115 பில்லியன் கொண்ட மேலதிக திரவத்தன்மையினை உட்செலுத்தி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் நிதியச் செலவுகளைக் குறைக்கின்ற வேளையில் பொருளாதாரத்திற்கு கொடுகடன் பாய்ச்சலினை துரிதப்படுத்துவதற்கு நிதியியல் முறைமையினை இயலச்செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *