Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கையையடுத்து நந்திக்கடலில் இராணுவ வேலிகள் பின்னகர்வு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கையையடுத்து  நந்திக்கடலில் இராணுவ வேலிகள் பின்னகர்வு

முல்லைத்தீவு நந்திக்கடல் சிற்றளவு மீனவர் சங்கத்தினால் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் – வவுனியா பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தனர். அதில் மீன்பிடி தேவைகளின் பொருட்டு நந்திக்கடல் இருமருங்கிலும் தமது பாவனையிலிருந்த வீதிகள் யுத்தம் நிறைவடைந்த பின் பாதுகாப்பு தரப்பினரால் மூடப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மீன்பிடி நடவடிக்கைகளில் பல தடைகளை பாதுகாப்பு தரப்பினர் விதித்ததாகவும் குறிப்பாக நந்திக்கடலின் வடக்குப் பகுதியில் தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் கரையில் தொழிலை கடற்படை மேற்கொள்ள அனுமதிக்காமை, முகத்துவாரம் பகுதியிற்கு செல்வதற்கு பாதை விடாமை, வாழ்வாதார பாதிப்பு போன்றவை தொடர்பில் ஆணைக்குழுவிற்கு முறையிட்டிருந்தனர்,

சங்கப் பிரதிநிதிகளின் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு, கடந்த செப்டெம்பர் மாதம் கோத்தாபய கடற்படை முகாமின் பொறுப்பதிகாரியினையும் அடுத்தகரையில் அமைந்திருக்கும் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியினையும் முறைப்பாட்டாளரையும் விசாரணைக்கு அழைத்து சிற்றளவு மீன்பிடியில் ஈடுபடும் தரப்பினது பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் மீனவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பிலும் எடுத்துக்கூறப்பட்டது.2

ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்வதாக தெரிவித்த படையினர் நந்திக்கடல் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கையின் பொருட்டு பல விடயங்களை தாம் மேற்கொள்வதாக ஆணைக்குழுவிற்கு உறுதியளித்திருந்தனர். இதனையடுத்து நந்திக்கடலின் ஒரு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் சிறுகடல் வரை இட்டிருந்த முட்கம்பி பாதுகாப்பு வேலிகளை பின்னகர்த்தியுள்ளனர். இதன் மூலம் மீனவர்கள் கரையோரமாக தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி நேரடியாக ஆராயுமுகமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சனவும் , சட்டத்தரணியும் விசாரணை அதிகாரியுமான ஆர்.எல்.வசந்தராஜாவும் நேரடியாக அப்பகுதிக்கு நேற்று சென்று அவதானிப்புக்களை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை அடுத்து நந்திக்கடல் கரையோரமாக இருந்த பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டு மீனவர்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி மேற்கொள்ளபட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *