Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா புறப்பட்டுச் சென்றது

இலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா புறப்பட்டுச் சென்றது

உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் ஸிம்பாப்வே, வட அயர்லாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று இரவு பொட்ஸ்வானா புறப்பட்டுச் சென்றுள்ளது.

பொட்ஸ்வானா புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அணியின் பயிற்சியாளர் திலக்கா ஜினதாச,இதற்கு முன்னர் நடைபெற்ற எந்தவொரு உலகக் கிண்ண அத்தியாயத்திலும் இலங்கை ஒரு வெற்றியைத்தானும் பெற்றதில்லை.இம்முறை இரண்டு வெற்றிகளை ஈட்டிக்கொடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு பொட்ஸ்வான செல்கின்றோம்.அத்துடன் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து சென்று அங்கும் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளோம்.

அங்குள்ள சூழலுக்கு ஏற்ப வீராங்கனைகளைத் தயார்படுத்துவதும் இதன் நோக்ககுமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.பொட்ஸ்வானாவில் தேசிய அணி மற்றும் கனிஷ்ட தேசிய அல்லது கழக அணிகளுடன் 6 போட்டிகளில் இலங்கை அணி மோதவுள்ளது என தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *