Search
Sunday 17 November 2019
  • :
  • :

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக சரத் ஜயமான்ன நியமனம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக  சரத் ஜயமான்ன நியமனம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. ஜயமான்ன நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
25 வருடங்களுக்கும் மேலாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் சேவைசெய்துள்ள திரு. சரத் ஜயமான்ன இப்பதவிக்கு நியமிக்கப்படும் போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக அரச தலைமை வழக்குரைஞர் நாயகமாக பதவி வகித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்கலைக்கழகத்தின் பட்டதாரியான திரு சரத் ஜயமான்ன ஒக்ஸ்பட் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டுள்ளதுடன்இ இலங்கையில் சட்டத்துறையில் டீ என் ஏ மற்றும் தொலைபேசி சாட்சிகளைக் கண்டறிவதில் முக்கியமாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *