செய்திகள்

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெரூசலேத்தை அங்கீகரித்தார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் உலக நாடுகளின் ஆலோசனைகளை நிராகரித்து இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரித்துள்ளார்.
இதன் மூலம் அவர் அமெரிக்காவின் நீண்ட கால கொள்கையை முடிவிற்கு கொண்டுவந்துள்ளதுடன் மத்திய கிழக்கு சமாதான முயற்சிகளிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெரூசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதற்கான தருணம் இதுவென்பது குறித்து நான் உறுதியாகயிருக்கின்றேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னயை ஜனாதிபதிகள் இதனை பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியபோதிலும் நிறைவேற்ற தவறிவிட்டனர் நான் இன்று இதனை நடைமுறைப்படுத்துகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் நடவடிக்கை ஓரு வருடகாலத்திற்குள் பூர்த்தியாகும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய கிறிஸ்தவ மற்றும் யூத சமூகத்தினரிற்கான புனித நகரமாக உள்ள ஜெரூசலேம் இஸ்ரேலிய பாலஸ்தீன சமூகத்தினரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பாரிய தடையாக காணப்படுகின்றது.