Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் தீர்மானத்தை குழப்பியது அமெரிக்கா

இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் தீர்மானத்தை குழப்பியது அமெரிக்கா

வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கண்டிக்கும் ஐநா பாதுகாப்பு சபை தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது.
குவைத்தின் வேண்டுகோளின் பேரில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கண்டனம் வெளியிடுவதற்காக ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை வெள்ளிக்கிழமை அவசர கூட்டமொன்றை நடத்தியிருந்தது.
எனினும் கூட்டறிக்கை அமெரிக்கா பல தடவை தடுத்ததை தொடர்ந்து கண்டனத்தை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தள்ளப்பட்டது.
காஸா பகுதியில் இஸ்ரேலிய படையினர் சனிக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் என மருத்துபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய துருப்பினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே இன்று மீண்டும் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
வெள்ளிக்கிழமை காஸா பள்ளத்தாக்கு பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் துணை மருத்துவபிரிவினர் இதனை உறுதிசெய்துள்ளனர் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 16 வயது இளைஞனும் உள்ளதாக தெரிவித்துள்ள துணைமருத்துவபிரிவினர் 500 பேர் வரை காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் கண்ணீர்புகைபிரயோகத்தையும் அவர்கள் மேற்கொண்டதாகவும் பாலஸ்தீனத்தின் துணைமருத்துவபிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1976 ம் ஆண்டு இஸ்ரேலிய படையினர் நிலங்களை ஆக்கிரமித்ததை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது ஆறு பேர் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து வருடம் தோறும் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இவ்வருடம் பாலஸ்தீனியர்கள் ஈடுபட்டவேளையே இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *