Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இ.தொ.காவின் ஆதரவு யாருக்கு? : இரகசியத்தை போட்டுடைத்த மகிந்த அமரவீர

இ.தொ.காவின் ஆதரவு யாருக்கு? : இரகசியத்தை போட்டுடைத்த மகிந்த அமரவீர

பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவை ஆதரிக்கவே தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மகிந்த அமரவீ தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் கோதாபய ராஜபக்‌ஷவை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம். எங்களுடன் மேலும் பல கட்சிகள் உள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கோதாபய ராஜபக்‌ஷவையே ஆதரிக்கும். அவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி அது தொடர்பாக தீர்மானித்துவிட்டனர். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *