Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஈமெயில் மூலம் இடம்பெறும் கொள்ளை : சர்வதேச கும்பல் பற்றி இலங்கையில் தகவல்

ஈமெயில் மூலம் இடம்பெறும் கொள்ளை : சர்வதேச கும்பல் பற்றி இலங்கையில் தகவல்

பல்வேறு நாடுகளின் பிரபுக்களின் சார்பில் முன்னின்று மின் அஞ்சல் செய்திகளை அனுப்பி பணத்தை கொள்ளையிடும் சர்வதேச கும்பல் நம் நாட்டிலும் செயற்படுவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிறு தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் சிலருக்கு இவ்வாறான மின் அஞ்சல் செய்தி கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மின் அஞ்சல் செய்தியில் ஆசிய வலய வறுமை மக்களுக்காக பெருந்தொகை பணத்தை ஒதுக்கீடு செய்யும் சமூக நலதிட்டங்கள் இருப்பதாகவும் இதற்காக நன்கொடைகளை எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த சமூக நல திட்டத்துக்கு பங்களிப்பு செய்யுமாறும் அதற்கான பணத்தை செலுத்த வேண்டிய முறை குறித்தும் மின் அஞ்சலில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் சங்க தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மின் அஞ்சல் செய்தி கிடைக்குமாயின் அதற்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் உலக நாடுகளிலும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர் இந்த மின் அஞ்சல் செய்தியை அனுப்பவர் உள் நாட்டை சேர்ந்தவரா இல்லை எனின் வேறு நாட்டை சேர்ந்தவரா என்பதும் இது வரை கண்டறியப்படவில்லை என்று சங்க தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *