தலைப்பு செய்திகள்

ஈரான் ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

ஈரான் ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

புதிய ஜனாதிபதியொருவரை தேர்ந்தெடுக்கும் ஈரானின் ஜனாதிபதி தேர்தல் இன்று இடம்பெறுகின்றது.

இம்முறை இத்தேர்தலில் வாக்களிக்க 54 மில்லியன் வாக்களார்கள் தகுதிப்பெற்றுள்ளனர். இன்று காலை வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு இதற்காக 63ஆயிரத்து 500 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஈரானின் தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாவதற்கு போட்டியிடுகின்றார். அவருக்கு போட்டியாக கடும்போக்காளரான இப்ராஹிம் ரைஸ் போட்டியிடுகின்றார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குளை பெற்று கொள்ள முடியாவிடின் அடுத்த கிழமை மேலும் ஒரு தேர்தல் சுற்று நடைபெறுமென ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *