Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்றத்தை நாட தயாராகும் ஜனாதிபதி : தேர்தல் தள்ளிப்போகுமா?

உயர்நீதிமன்றத்தை நாட தயாராகும் ஜனாதிபதி : தேர்தல் தள்ளிப்போகுமா?

தனது பதவிக்காலம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் அவர் நீதிமன்றத்திடம் அதுபற்றி கோரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடத்தில் இருந்து 5 வருடங்களாக குறைக்கப்பட்டது. ஆனால் அந்த திருத்தம் 2015 மே 15ஆம் திகதியே நிறைவேற்றப்பட்டுள்ளதால் அவரின் பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றது என்ற குழப்ப நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களே என அறிவித்துள்ளது. ஆனால் அவரின் பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றது என்பதனை கூறவில்லை. இதனால் ஜனாதிபதி அதுபற்றி கோரவுள்ளார்.
இவ்வாறாக நீதிமன்றத்திடம் கோரும் பட்சத்தில் பதவிக்கலாம் அடுத்த வருடம் மே 15ஆம் திகதியே முடிவடைவதாக உயர்நீதிமன்றம் அறிவித்தால் ஜனாதிபதி தேர்தல் மார்ச் மாதத்தின் பின்னர் வரை ஒத்திவைக்கப்படலாம். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *