தலைப்பு செய்திகள்

உயிரிழந்தவர் உயிருடன் வந்ததால் குழப்பமடைந்த பிரதேசவாசிகளும் குடும்பத்தாரும்

உயிரிழந்தவர் உயிருடன் வந்ததால் குழப்பமடைந்த பிரதேசவாசிகளும் குடும்பத்தாரும்

கொழும்பை அண்மித்த ஊரொன்றில் ஒரு மாதத்திற்கு முன்னர் விபத்தொன்றில் உயிரிழந்திருந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தவர் மீண்டும் உயிருடன் வீட்டுக்கு வந்ததால் அந்த ஊரில் மக்கள் அச்சத்திற்கு சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மீகொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்திருந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த சடலத்தை அடையாளம் காணும் வகையில் அதிகாரிகள் புகைப்படத்தை பிரதேசத்தில் காண்பித்துள்ள நிலையில் அவர் 79 வயதுடைய களுத்துறை களுத்துறை மாமா என பிரதேசவாசிகள் அடையாளம் காட்டிய நிலையில் அதனை அவரின் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த சடலம் களுத்துறை மாமா என்பவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அதற்கான இறுதிக்கிரியைகளும் நடத்தப்பட்டு பொது மயானத்தில் புதைக்கப்பட்டு அதற்கான கல்றையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் களுத்துறை மாமா என்பவர் ஊருக்கு வந்துள்ளார். இதன்போது ஊரார் அவரை கண்டு ஓடியுள்ளதுடன் சிலர் அவரை பேயென தாக்குவதற்கும் முயன்றுள்ளனர். அத்துடன் தனது வீட்டுக்கு அவர் சென்ற போது வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்து கத்தியுள்ளனர். இதன்போது ஏன் இவர்கள் அச்சப்படுகின்றார்கள் என அவர் தேடிப்பார்த்த போது தான் உயிரிழந்துள்ளதாக இறுதிக்கிரியை செய்தமையை அறிந்துள்ளார்.
இதன்பின்னர் அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸாருடன் வீட்டுக்கு வந்துள்ளார். இவ்வேளையில் தான் பெப்ரவரில் வேலைக்காக வெளியில் சென்றிருந்ததாகவும் மார்ச் மாதத்தில் ஊரடங்கு சட்டம் போட்டமையினால் தன்னால் வீட்டுக்கு வர முடியாது இடமொன்றில் தங்கியிருந்ததாகவும் தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியதால் வீடு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேறு நபர் ஒருவடையை சடலத்தையே இவர் என நினைத்து வீட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்த நபர் யார் என்பது தொடர்பாக மீண்டும் பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *