Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் நூற்று எழுபத்தாறு சிறுவர்கள் பெற்றோரை இழந்துவிட்டனர்

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் நூற்று எழுபத்தாறு சிறுவர்கள் பெற்றோரை இழந்துவிட்டனர்

ஏப்ரல் 21 அன்று நடந்த குண்டுவெடிப்பில் நூற்று எழுபத்தாறு சிறுவர்கள் தமது தாயை அல்லது தந்தையை இழந்துவிட்டனர். மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவுவதற்காக தேவாலயம் கவனம் செலுத்துகிறது. . சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதில் தேவாலயம் கவனம் செலுத்தாது, ஏனெனில் அரசாங்கம் அந்த வேலையை மேற்கொண்டுள்ளது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து என்ன நடந்தது, தேவாலயம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி பாப்பரசருக்கு விளக்கினேன்.. “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான சேத விபரங்களை பாப்பரசருக்கு இறுவெட்டுக்களை வழங்கி தெரியப்படுத்தினேன் என அவர் மேலும் தெரிவித்தார்.கத்தோலிக்கர்களின் புனித நகரான வத்திக்கானுக்கு சென்று பரிசுத்த பாப்பரசரை சந்தித்தபின்னர் அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே குறித்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *