தலைப்பு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் ஏற்பட்டுள்ள உயிர்சேதங்களை ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருவதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளை இணையத்தில் கண்காணிக்கும் SITE என்ற புலனாய்வு அமைப்பை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், நியுசிலாந்து பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பழிவாங்கலாக குறிப்பிட்டு அவர்கள் வெற்றி களிப்பு வெளியிட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் இட்டு ‘ தற்கொலை குண்டுதாரிகளை’ அல்லா ஏற்றுக்கொள்வாராக என்று அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த தாக்குதல்களுக்கு ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பு உரிமை கோருவதற்கு தயாராகி வருவதை இது காட்டுவதாக SITE அமைப்பின் பணிப்பாளர் காட்ஸ் ரீட்டா தெரிவித்தார்.

நியூசிலாந்து தாக்குதலுக்கான பழிவாங்களாக இது குறிப்பிடப்பட்டாலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் நீண்ட காலத்துக்கு முன்னரேயே திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *