Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியமளிக்க பிரதமருக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியமளிக்க பிரதமருக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.

அதன்படி எதிர்வரும் 6 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள தெரிவுக்குழு விசாரணைகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, அமைச்சர்களான சாகல ரத்நாயக மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் அடுத்ததாக சாட்சியம் வழங்க பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆறாம் திகதி தெரிவுக் குழு அமர்வின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கவுள் ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித் துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *