Search
Sunday 20 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உலகவாழ் தமிழர்களே விழிப்படைவீர்! விரைந்து செயல்படுவீர்

உலகவாழ் தமிழர்களே விழிப்படைவீர்! விரைந்து செயல்படுவீர்

பேராசிரியர். மு.நாகநாதன்

ஐ.நா.மன்றத்தின் பொதுஅவையின் கீழ் இயங்கும் மனித உரிமைகள் அவையின் 40 வது கூட்டத் தொடர் பிப்ரவரி 25தொடங்கி இம்மாதம் 22 தேதி முடிகிறது. ஈழப் போரில் நடந்த இன அழிப்பு, படுகொலைகள், போர்க் குற்றங்கள் ஆகியவையும், சிங்கள இனவாத அரசின் அலட்சியப் போட்டியையும் மனித உரிமைகளின் உயர் ஆணையரின் ஆண்டு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் மனித உரிமைக்குழுவின் உயர் ஆணையரின்ஆண்டு அறிக்கை படிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் 51 வது பத்தியில், உயர்ஆணையர் மனித உரிமைகள் மீறல்கள் தடையின்றி பெருகி வருகின்றன. கடுமையான குற்றங்களும் தொடர்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். இந்நாள் வரை ஸ்ரீலங்கா அரசிற்கு மனித உரிமை ஆணையம் அளித்த வாய்ப்பினை பயன்படுத்தி எவ்விதமான நம்பிக்கை தரும் அமைப்பின் வழியாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிங்கள அரசு தவறிவிட்டது. அதற்காக முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. சில மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து பன்னாட்டு விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா.மன்றத்தின் பாதுகாப்பு அவையின் வழியாக குற்றங்களுக்கு மிகப் பொறுப்பானவர்களை பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்தின் வழியாக விசாரணை செய்து தண்டனையை பெற்றுத் தரவேண்டும் . மனித உரிமை மீறல்களையும்,போர்க் குற்றங்களையும்,மற்ற விதி மீறல்களையும் செய்த சிங்களவர்கள் மீது பன்னாட்டுச் சட்டத்தின் விதிகள் படி உரிய நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற் கொள்வதை நாங்கள் மீண்டும் ஆதரிக்கிறோம். இந்நடவடிக்கைகள் உள்நாட்டில் வாழும் சந்தேகத்துக்குரிய சிலரருக்கு மட்டுமே பொருந்தலாம் . மாற்றாக பன்னாட்டு விசாரணை கடும் குற்றவாளிகளை இனம் கண்டு உரிய விசாரணையையும் தண்டனையையும் வழங்க முடியும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *