தலைப்பு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கெட் : மழை பெய்யும் பிரதேச மைதானங்களின் மேல் பலூன் கூரை

உலக கிண்ண கிரிக்கெட் : மழை பெய்யும் பிரதேச மைதானங்களின் மேல் பலூன் கூரை

2019 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில் போட்டிகள் நடைபெறும் மைதானப் பகுதியில் அடிக்கடி மழையுடன் கூடிய கால நிலை நிலவுவதால் அது போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சில போட்டிகளை கைவிடவும் வேண்டி வந்துள்ளன.
இவ்வாறான நிலைமையில் மழை பெய்யும் பகுதிகளிலுள்ள மைதானங்களின் மேல் பகுதியில் வாயு பலூனின் உதவியுடன் செயற்கை கூரையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் எந்தளவு மழை பெய்தாலும் எவ்வித பிரச்சினையும் இன்றி போட்டிகளை நடத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னர் இவ்வாறான முறைமை மேற்கொள்ளப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -(3)IMG_20190612_172501


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *