Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உல்லாச மற்றும் பௌத்த செயற்பாடுகளுக்காக இலங்கை வருபவர்களுக்கு விசா இலவசம்

உல்லாச மற்றும் பௌத்த செயற்பாடுகளுக்காக இலங்கை வருபவர்களுக்கு விசா இலவசம்

உல்லாசம் மற்றும் பௌத்த சமய செயற்பாடுகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்பவர்களுக்கு விசா நடைமுறையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் அமுலுக்கு வரும் என்று ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுவெலயில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கூறினார். பல நாடுகளில் இருந்து வருவோருக்கு இது பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டின் சுற்றுலா கைத்தொழில் அபிவிருத்திக்காகவும் பௌத்த சமய எழுச்சிக்காகவும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கம்பூச்சியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்போது வீசா பெற்றுக்கொள்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கையக்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக நாட்டுக்கு வருகை விஜயம் செய்யும் கம்பூச்சியாவிற்கும் வீசா நடைமுறையை நீக்கி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *