Search
Monday 24 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் வாக்கெடுப்புச்சட்டத் திருத்தங்கள் தொடர்பாக அரசியல் கட்சிப்பிரதிநிதிகளை அறிவுறுத்தும் பயிற்சி பட்டறை

உள்ளூராட்சி தேர்தல் வாக்கெடுப்புச்சட்டத் திருத்தங்கள் தொடர்பாக அரசியல் கட்சிப்பிரதிநிதிகளை அறிவுறுத்தும் பயிற்சி பட்டறை

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த உள்ளுராட்சிஅதிகாரசபை தேர்தல் வாக்கெடுப்புச்சட்டத் திருத்தங்கள் மற்றும் அது பற்றிய பிரச்சனைகள் தொடர்பாக அரசியல் கட்சிப்பிரதிநிதிகளை அறிவுறுத்தும் பயிற்சி பட்டறை இன்று காலை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் பெண் பிரதிநிதித்துவம் ஒன்றின் அவசியம் தொடர்பாக கருத்தரங்கை நடத்தியிருந்தார்.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) எம். எம். மொகமட் உள்ளுரதிகார சபைத்தேர்தல் வாக்கெடுப்புச்சட்டத் திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக விரிவுரையை நடத்தியிருந்தார்.

இதேவேளை, இதன் பின்னர் இது தொடர்பான ஊடகசந்திப்பும் இடம்பெற்றது. இதில் கபே அமைப்பின் இணைப்பாளர் மனாஸ் கருத்துரை வழங்கியிருந்தார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *