Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஊரடங்கு இல்லா மாவட்டங்களில் அரச , தனியார் போக்குவரத்து சேவையை பயன்படுத்த அனுமதி

ஊரடங்கு இல்லா மாவட்டங்களில் அரச , தனியார் போக்குவரத்து சேவையை பயன்படுத்த அனுமதி

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் அரச-தனியார் பஸ் வண்டிகளிலும், ரயில் வண்டிகளிலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் இன்று முதல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என போக்கு வரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதன் காரணமாக அநாவசியமான பயணங்களைத் பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடமைக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கி போக்குவரத்துச் சேவைகளை நடத்த முடியும். பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவைகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்.
இன்று தொடக்கம் ரயில் பயணிகளுக்கு அனுமதிப் பத்திரங்களும், பருவச் சீட்டுக்களும் விநியோகிக்கப்படும். அனுமதிப் பத்திரம் பெறும் பயணிகள் தமது நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள ஆள் அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமானது. பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *