Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.கடந்த 5 வருட காலப்பகுதியில் இந்த மாகாணசபையில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை முன்னெடுத்துள்ளனர்.கடந்த மாகாண சபை தேர்தல் பெறுபேறிற்கு அமைவாக 34 உறுப்பினர்களுடன் 2 போனஸ் அங்கத்தவர்களைக் கொண்டதாக இது அமைந்திருந்தது.

இதில் 19 உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு உட்பட்டவர்களாவர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் 2 உறுப்பினர்களும் இந்த மாகாண சபையில் இடம்பெற்றிருந்தனர்.சஸீந்திர ராஜபக்ச, ஹரின் பெர்னான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர் 6 ஆவது ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க பதவி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஊவா மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் இருந்து வந்ததது மேலும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *