Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எங்களால் நல்ல நிலைக்கு வர முடியும் : இலங்கை அணி தலைவர்

எங்களால் நல்ல நிலைக்கு வர முடியும் : இலங்கை அணி தலைவர்

தமது அணியால் மீண்டும் சிறந்த நிலைக்கு வர முடியுமெனவும் அதற்காக மக்களின் உதவிகள் அவசியமாகுமெனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்திய அணியுடனான போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் 6ஆவது இடத்திற்காவது வருவோம் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதேபோன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் கூட வெற்றிப் பெற மாட்டோம் என்றே நாங்கள் இலங்கையிலிருந்து வரும் போது சிலர் கூறினார்கள். எவ்வாறாயினும் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளேர். சில இடங்களில் எங்களுக்கு சிறப்பாக விளையாடட முடியாது போயுள்ளது. சில நாட்களில் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். சில நாட்களில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்நிலையில் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. அந்த போட்டிகளில் விளையாடியிருந்தால் நாங்கள் சிலவேளைகளில் வெற்றிப் பெற்றிருக்கவும் கூடும்.
தற்போது எங்களுக்கு அரையிறுதிக்குள் செல்ல முடியாது என்ற போதும் சிறப்பாக விளையாடியுள்ளோம். சில சில குறைபாடுகள் இருந்துள்ளன. எவ்வாறாயினும் வீழ்ந்துள்ள நேரத்தில் எழும்புவதற்காக கைகொடுப்பவர்களே தேவை. எப்போதாவது ஒருநாள் எங்களுக்கு நல்ல நிலைக்கு வர முடியும். அதனை நோக்கி நாங்ககள் பயணிக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *