Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

”எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்” : இலங்கை அணி ரசிகர்களிடம் உபுல் தரங்க வேண்டுகோள்

”எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்” : இலங்கை அணி ரசிகர்களிடம் உபுல் தரங்க வேண்டுகோள்

இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்குமாறும் மீண்டெழ தங்களுக்கு ஆதரவாக இருக்குமாறும் அணித் தலைவர் உபுல் தரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா கிரிக்கட் ஊடாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
”அனைத்து அணிகளுக்கும் கடுமையான காலங்களை எதிர்கொள்ள நேரும். எத்தகைய பலம்பொருந்திய அணியாக இருந்தாலும், இந்த வலையத்துக்குள் சிக்கும் ஒரு நிலை ஏற்படலாம். கடந்த 18 வருடங்களாக இலங்கை அணி அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலும் சிறந்துவிலங்கி இருந்தமையை மறந்துவிடக் கூடாது. தற்போது அதன் கடுமையான காலத்தில் பயணிக்கிறது. இதில் இருந்து மீளுவோம். இந்த விடயத்தில் இலங்கை அணியின் மீது அனைவரும் நம்பிக்கை வைத்து, ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என உபுல்தரங்க கோரிக்கை விடுத்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *