Search
Friday 18 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எட்டியாந்தோட்டையில் அதிகமானோர் பாதிப்பு

எட்டியாந்தோட்டையில் அதிகமானோர் பாதிப்பு

தொடரும் சீரற்ற கால நிலையால் களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாகவும் இதனால் தாழ் நில பகுதிகளில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எட்டியாந்தோட்ட பகுதியில் நீர் மட்டம் உயர்வடைவதை அவதானிக்க முடிவதுடன் நீரோட்டத்தின் வேகமும் அதிகரித்துள்ளதாகவும் இதனால் அந்த பகுதியில் தோனிகள் மற்றும் படகுகள் ஊடாக ஆற்றை கடக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சபரகமுவ மாகாணத்தில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்துள்ளது. இதனால் குகாலை மாவட்டத்தில் 661 பேர் பாதிக்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் வீடுகள் பல காற்றில் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் எட்டியாந்தோட்ட பிரதேச செயலக பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *