Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர

எதிர்பார்த்த அளவுக்கு தமக்கு வாக்குகள் கிடைக்கவில்லையென ஜே.வி.பி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடருமென அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஓரளவுக்கு தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தளவுக்கு முடிவுகள் கிடைத்திருக்கவில்லை. பெறுபேறுகள் எப்படி இருந்தாலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாங்கள் முன்னெடுக்கும் பணிகளை முன்னெடுப்போம். எமக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *