எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவையை வழமை போன்று முன்னெடுப்பதற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.அடுத்துவரும் சில தினங்களில் மக்களின் செயற்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை, இனிமேல் நடைமுறையில் இருக்காதெனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.ஆனாலும் முற்பதிவு நடைமுறை தொடரும் என ரயில் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை ரயிலிலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் அனுமதிக்கப்படுவதால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயணங்களை மட்டுப்படுத்துமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்..(15)




