Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாளை முதல் ஆரம்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாளை  முதல் ஆரம்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன.இதற்கமைய நாளை, நாளை மறுதினம் மற்றும் 1, 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளிலும் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.மேலும் சுகாதார சேவைகள் அதிகாரிகள் நாளைய தினம் வாக்களிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *