Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எதிர்வரும் வாரங்களில் ஊரடங்கை முற்றாக நீக்க ஆராய்வு

எதிர்வரும் வாரங்களில் ஊரடங்கை முற்றாக நீக்க ஆராய்வு

அடுத்து வரும் வாரங்களில் ஊரடங்கு சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வாரத்திற்குள் சமூகத்திற்குள்ளிருந்து கொரோனா தொற்றாளார்கள் அடையாளம் காணப்படாவிட்டால் ஊரடங்கை முற்றாக நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான செயலணியின் பிரதானி பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த 5 வாரங்களில் கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோரிடையே மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். ஆனால் சமூகத்திற்குள்ளிருந்து ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையிலேயே ஊரடங்கை முற்றாக நீக்குவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் அதன் பின்னர் 6ஆம் திகதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *