Search
Tuesday 14 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எந்த கட்சியும் பெரும்பான்மை ஆசனம் பெறாத சபைகளில் என்ன நடக்கும்?

எந்த கட்சியும் பெரும்பான்மை ஆசனம் பெறாத சபைகளில் என்ன நடக்கும்?

வெளியாகியுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் முடிவுகளுக்கமைய சபைகள் பலவற்றில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் சபைகள் பலவற்றில் மற்றைய கட்சிகளை விடவும் அதிகபடியான ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள போதும் வட்டாரம் மற்றும் விகிதாசார முறைகளை உள்ளடக்கிய கலப்பு முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளமையினால் அந்த சபைகளில் 50 வீதத்திற்கும் அதிகமான ஆசனங்களை அந்த கட்சிகளும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணத்தினால் குறிப்பிட்ட சபைகளில் ஏதேனும் கட்சி ஆட்சியமைக்க வேண்டுமென்றால் மற்றைய கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும் சபையில் ஏதேனும் கட்சிக்கு 50 வீதத்திற்கும் ஆதிமான ஆசனம் இல்லாத நிலைமையின் போது சபையின் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவின் மூலம் தலைவர் , மேயர் , உள்ளிட்டோரை நியமிக்க முடியுமெனவும் ஆனால் 50 வீதத்திற்கும் அதிகமான ஆசனங்கள் ஏதேனும் கட்சிக்கு இருக்குமாக இருந்தால் அந்த கட்சியின் செயலாளரினால் குறித்த பதவிக்குறியவர்களை நியமிக்க முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *