Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எந்த தரப்புடனும் இணைந்து ஆட்சியமைக்கும் நோக்கம் கிடையாது : கூட்டமைப்பு தெரிவிப்பு

எந்த தரப்புடனும் இணைந்து ஆட்சியமைக்கும் நோக்கம் கிடையாது : கூட்டமைப்பு தெரிவிப்பு

எந்த தரப்புடனும் இணைந்து அரசாங்கம் அமைக்கும் நோக்கம் தமக்கு கிடையாது எனவும் இது வரை எந்த கட்சியிடமிருந்தும் அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவுகள் தம்மிடம் கோரப்படவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாகவும் இந்த கட்சிகள் இரண்டும் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செய்துகொண்டுள்ள கூட்டு அரசாங்கம் தொடர்பான இரண்டு வருட ஒப்பந்த காலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது. அதன்பின்னர் இரண்டு கட்சிகளும் கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகி தனித்து அரசாங்கத்தை அமைக்கும் நிலைமை ஏற்படலாம் எனவும் இதன்போது தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி நாடலாம் எனவும் அரசியல் வட்டாரங்களின் கருத்துக்கள் வெளியாகின்றன.
இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தில்,
இது வரை எங்களுடன் எந்த கட்சியும் இது தொடர்பாக பேச்சு நடத்தியதில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தொடர்ந்தும் அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். இந்த இரண்டு கட்சிகளும் அரசாங்கத்தில் இருப்பதன் மூலமே அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்களை நிறைவேற்ற முடியும். நாங்கள் அரசாங்கத்தில் சேருவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.
இதன்படி இந்த அரசாங்கம் தொடர்ந்தும் 2020 வரை இருக்க வேண்டும். அதற்கு மேல் தொடர்ந்தாலும் பரவாயில்லை. இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தில் இருக்கும் போதே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என நாம் கருதுகின்றோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *