Search
Thursday 19 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எனது காலத்தில் இப்படி நடக்கவில்லை : எரிபொருள் விலையேற்றம் பற்றி மகிந்த

எனது காலத்தில் இப்படி நடக்கவில்லை : எரிபொருள் விலையேற்றம் பற்றி மகிந்த

இரண்டு மாத காலத்தில் இரண்டு தடவைகள் எரிபொருள் விலைகளை அதிகரித்து அரசாங்கம் மக்களை சுமைகளுக்குள் தள்ளியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சியின் போது தான் இவ்வாறு அதிகரிக்கவில்லையெனவும் இந்த அரசாங்கத்திலேயே அடுத்தடுத்து இவ்வாறு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனது காலத்தில் சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலைக்கு ஏற்றால் போன்றே விலைகள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் காணப்படும் விலையை விட அதிக விலைக்கே எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றன. இது மக்களை சுரண்டும் செயற்பாடுகளே என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை விடுத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *