பஞ்சாப் அணிக்காக என்னை தெரிவு செய்ததன் மூலம் விரேந்திர சேவாக் ஐபிஎல்லை காப்பாற்றிவிட்டார் என நேற்றைய போட்டியில் சதமடித்த கிறிஸ்கெய்ல் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கிறிஸ்கெயில் 63 பந்துகளில் 11 சிக்சர்களுடன் 104 ஓட்ட்ங்களை பெற்றார்
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற்ற பின்னர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யபபட்டுள்ள கிறிஸ்கெயில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நான் எப்போதும் இலக்கை எட்டவேண்டும் என்ற உறுதியுடன் இருப்பேன் எந்த அணி;க்காக விளையாடினாலும் நான் எனது 100 வீதத்தை வழங்கவேண்டும் என்பது குறித்து உறுதியாகயிருப்பேன் என கெயில் தெரிவித்துள்ளார்.
எனக்கு இது புது அணி என தெரிவித்துள்ள கிறிஸ்கெயில் இறுதிநேரம் வரை என்னை எந்த அணியும் தெரிவு செய்யாததை பலர் சுட்டிக்காட்ட கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
என்னை பஞ்சாப் அணிக்கு தெரிவு செய்துள்ளதன் மூலம் விரேந்திரசெவாக் ஐபிஎல்லை காப்பாற்றியுள்ளார் எனவும் கெயில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றை வெற்றி குறித்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன் சிறப்பாக விளையாடுவது மனோநிலை மற்றும் ஆடுகளத்தின் போக்கை பொறுத்தவிடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்தியாவில் பல வருடங்கள் விளையாடுவதால் எனக்கு ஆடுகளங்கள் குறித்து தெரிந்துள்ளது எனவும் கிறிஸ்கெய்ல் தெரிவித்துள்ளார்.

Previous Postசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்;புடையவர் சிரியாவில் கைது
Next Postஅர்ஜுன மகேந்திரனை கைது செய்ய சிவப்பு அறிவித்தல்