செய்திகள்

எப்படியான கொள்கைக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை உள்ளூராட்சி தேர்தல் மூலம் அறிய முடியும்! சுமந்திரன் எம்.பி

எப்படியான கொள்கைக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை உள்ளூராட்சி தேர்தல் மூலம் அறிய முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்று கட்சிகளுக்கும் இடையில் ஆசன ஒதுக்கீடு தொடர்பான தகராறு முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. வருகின்ற தேர்தலிலே தமிழரசு கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுவது என்று மூன்று கட்சிகளும் இனங்கியிருக்கிறோம். இன்று இருக்கின்ற சூழலிலே புதிய அரசியலமைப்பு தீர்மானம் ஒரு உத்வேகத்தை கொடுப்பதோடு இம்முயற்சிகளுக்கு மக்களது ஆதரவு எங்களுக்கு இருக்கென்பதை தெரியப்படுத்த வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிச்சென்ற ஈபிஆர்எல்எவ் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்திருக்கின்றனர். யாரும் எவருடனும் சேரலாம், தேர்தலிலும் போட்டியிடலாம். அத்தோடு பல தேர்தல்களை பகிஷ்கரித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கூட தற்போது உள்ளூராட்சி தேர்தலிலே போட்டியிடுவது வரவேற்கத்தக்கது.

இறுதியாக எப்படியான கொள்கைக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்பதும் யாருக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்பதும் இந்த தேர்தலினூடாக அறிய முடியும். திரும்பவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.

N5