Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எமக்கு அதிகாரம் தந்தால் வடக்கில் வன்முறை குழுக்களை அடக்குவோம்: இராணுவ தளபதி

எமக்கு அதிகாரம் தந்தால் வடக்கில் வன்முறை குழுக்களை அடக்குவோம்: இராணுவ தளபதி
குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் வடக்கில் செயற்படும் சகல வன்முறை குழுக்களையும் அடக்க முடியும் என்று இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது வருட நிறைவை ஒட்டி கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருது தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் கூடுதல் அதிகாரத்தை வழங்க முடிவுசெய்தால் இராணுவம் தனது கடமைகளை நிறைவுசெய்யும் என்று கூறினார்.
இராணுவத்துடன் கலந்துரையாடப்பட்டே முகாம்கள் அகற்றப்படுவதாகவும் அவை தன்னிச்சையான முறையில் அகற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு  முகாம்களை மீள இடமாற்றம் செய்யமுடியும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *