Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக வடக்கு – கிழக்கு மக்களை கைவிட மாட்டோம் பிரதமர்

எமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக வடக்கு – கிழக்கு மக்களை கைவிட மாட்டோம் பிரதமர்

தென்பகுதி மக்களின் வாக்குகளால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தாலும் வடக்கு , கிழக்கு மக்களை ஒருபோதும் தாம் கைவிட மாட்டோம் எனவும் தெற்கை போன்று வடக்கு , கிழக்கிலும் அபிவிருத்திகளை மேற்கொள்வோம் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டமொன்றிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு முழு நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும். இதற்காக ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஒன்றாக செல்ல வேண்டும். அரசாங்கம் வேறு ஒன்றாகவும் ஜனாதிபதி வேறு கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கும் போது அது பிரச்சினையானதாகவே இருக்கும். இதனை கடந்த காலங்களில் நாங்கள் அவதானித்துள்ளோம். இதனால் பாதிக்கப்பட்ட மக்களே ஆகும். கடந்த காலங்களில் வடக்கு , கிழக்கு வாக்குகள் இன்றி யாருக்கும் ஜனாதிபதியாக முடியாது என்று கூறினார்கள். தற்போது அதனையே கூறுகின்றனர். ஆனால் வடக்கு , கிழக்கில் ஜனாதிபதிக்கு வாக்களிக்காவிட்டாலும் நாங்கள் அவர்களை கைவிடப் போவதில்லை. நாங்கள் அங்கு அபிவிருத்திகளை மேற்கொண்டு மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு செல்வோம். என தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *