Search
Friday 18 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது-வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது-வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த செயற்பாட்டை சில அமைப்புக்களும் முன்னெடுக்கின்றனர். அதேபோன்று தற்போது தனி நபர்களும் ஆரம்பித்துள்ளனர் என .என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் உள்ள குறித்த சங்கத்தின் தலைவியின் இல்லத்தில் இன்று காலை 10.30 மணியளவில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது குறித்த சங்கத்தின் தலைவி ஊடகங்களிற்கு தெரிவித்த பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்தது தெரிவித்த கிளிநொச்சி வன்னேரி குளம் பகுதியை சேர்ந்த இந்திராதேவி என்ற தாய் தெரிவிக்கையில்,எனது மகளான ஜெயமதி 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவு பெற்றபோது இராணுவத்திடம் சரணடைந்த முதல் தேடி வருகின்றோம். இந்த நிலையில் கடந்த மாதம் 5ம் திகதி எனது மகளின் புகைப்படத்துடன் ஒருவர் எமது பிரதேசத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அவரை நாங்கள் அக்கராயன் பொலிசாரிடம் ஒப்படைத்தோம். எனது மகளின் இந்த புகைப்படம் மற்றும் ஏனைய புகைப்படங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களுடன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்றிருந்தார்.

அவரை அன்றுமுதல் நாம் காணாதவர்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த நிலையில் இவரது புகைப்படத்துடன் சிலர் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் எனது பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள் என அவர் ஊடகங்கள் ஊடாக தெரிவித்தார்.

கிளிநொச்சி வன்னேரிகுளம் பகுதியை செர்ந்த இந்த தாயாரின் பிள்ளையின் புகைப்படத்தை வைத்துஇருவர் நிதி சேகரித்துள்ளனர். இந்த தாயாரின் பிள்ளை படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது இந்த புகைப்படம் அடங்கலான பல ஆவணங்களோடு சென்றிருந்தார். இந்த புகைப்படம் எவ்வாறு இவர்களுக்கு கிடைத்தது. இந்த உண்மையை அரசியல்வாதிகளும், எமது தமிழ் தலைமைகளும் உணரவேண்டும். அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *