Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எல்பிட்டிய தேர்தல் : முன்னேறிய மகிந்த அணி – வீழ்ச்சி கண்ட ஐ.தே.க : ஜே.வி.பிக்கும் முன்னேற்றம்

எல்பிட்டிய தேர்தல் : முன்னேறிய மகிந்த அணி – வீழ்ச்சி கண்ட ஐ.தே.க : ஜே.வி.பிக்கும் முன்னேற்றம்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி கடந்த முறையை விட வாக்குகளில் வீழ்ச்சியை கண்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 10,427 வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 10,113 வாக்குகளையே பெற்றுக்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் 2011ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 19,954 வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்ததுடன் இம்முறை மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 5,273 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
இதேவேளை ஜே.வி.பியின் வாக்கு வங்கியும் சற்று அதிகரித்துள்ளது. கடந்த முறை 1100 வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்த ஜே.வி.பி இம்முறை 2,435 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *