Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எழுக தமிழ்ப் பேரணியில் யாழில் அணி திரண்ட மக்கள் வெள்ளம்

எழுக தமிழ்ப் பேரணியில் யாழில் அணி திரண்ட மக்கள் வெள்ளம்

யாழ்ப்பாணம்- நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் தற்போது ஆரம்பமாகியுள்ள எழுக தமிழ்ப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் குறித்த பேரணி ஆரம்பமானது.மேலும் இந்த பேரணிக்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இந்த பேரணியில் இணைந்துகொண்டிருப்பதுடன் ஏனைய மாவட்டங்களில் இருந்து பேருந்து வண்டிகளில் பெருமளவு மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இதுவரை பங்கெடுத்துள்ள மக்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற எழுக தமிழை விட மிகவும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்தும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உள் சுற்றுவட்டத்திலிருந்தும் இரு பேரணிகள் சம நேரத்தில் ஆரம்பமாகி, யாழ்ப்பாணம் முற்றவெளிளியை பேரணி தற்போது சென்றுகொண்டிருக்கிறது.  முற்றவெளியை பேரணி அணுக தொடங்கியதும் அருகில் உள்ள ஆலயங்களில் காண்டா மணிகள் ஒலிக்கப்பட்டன.  குடாநாடு முழுவதும் எங்கும் உணர்ச்சி பிரவாகம் மேலோங்கி இருக்கிறது.

Eluka tamil 7 Eluka tamil 6 Eluka tamil 5 Eluka tamil 4 Eluka tamil 3 Eluka tamil 1

1 2 3 7


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *