Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எழுக தமிழ் பேரணி யாழ் முற்றவெளியை சென்றடைந்தது

எழுக தமிழ் பேரணி யாழ் முற்றவெளியை சென்றடைந்தது

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்தும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உள் சுற்றுவட்டத்திலிருந்தும் ஆரம்பமாகிய எழுக தமிழ் பேரணி யாழ். முற்றவெளியைச் சென்றடைந்தது.அலைகடலென திரண்டுள்ள மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அத்தோடு எழுக தமிழ் பாடலும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்படவுள்ளது.தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணி தற்போது யாழ். முற்றவெளியைச் சென்றடைந்தது.FB_IMG_1568611318961

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக் கணக்கானோர் யாழ்ப்பாணம் முற்றவெளியை வந்தடைந்துள்ளனர்.தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை வலி­யு­றுத்­தியும், தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை சர்­வ­தே­சத்­திற்கு வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும், யாழ்ப்­பா­ணத்தில் இன்று எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள் பூரண ஆரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *