Search
Tuesday 2 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எஸ்.பியின் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்

எஸ்.பியின் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்

கினிகத்தென்ன பொல்பிட்டிய பகுதியில்,  நேற்று இரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பிரசார நடவடிக்கையின் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்கள்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

எஸ்.பி.திசநாயக்க சென்ற வாகனத்தை நேற்றிரவு 7.30 மணியளவில் பொல்பிட்டிய பகுதியில் பொதுமக்கள் சிலர் வழிமறித்தனர்.

வாகனத்தை பயணிக்க விடாமல் தடுத்தபோது, ஏற்பட்ட வாக்குவாதங்களை அடுத்து, பொதுமக்கள் மீது எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த இரண்டு பேர், தெலிகம  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *