Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஏட்டிக்கு போட்டியாக மேதின கூட்டத்திற்கு தயாராகும் மலையக கட்சிகள் : மக்களை திரட்ட கடும் போட்டி

ஏட்டிக்கு போட்டியாக மேதின கூட்டத்திற்கு தயாராகும் மலையக கட்சிகள் : மக்களை திரட்ட கடும் போட்டி

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன ஏட்டிக்கு போட்டியாக மலையகத்தில் மேதின கூட்டத்தை நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் மனோ கணேசன் ,திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் தலைமையில் தலவாக்கலை நகரிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கூட்டம் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கினிகத்தேனை நகரிலும் நடத்தப்படவுள்ளது.
இதன்படி ஒவ்வொரு தோட்டங்களிலும் தமது கூட்டங்களுக்கு ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளில் இந்த இரு அணிகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் தரகர்களை பயன்படுத்தியும் அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாருக்கு பலம் அதிகம் என காட்ட இரு அணிகளும் தோட்டம் தோட்டமாக சென்றும் மற்றும் தமது தரகர்களை பயன்படுத்தியும் தொழிலாளர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி எப்படியாவது கூட்டங்களுக்கு அழைக்க கடும் முயற்சிகளில் ஈடுபட்ட வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் வடிவேல் சுரேஸ் தலைமையிலான குழுவொன்று கொழும்பில் நடைபெறும் தமது கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து செல்வதற்காகவும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *